உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் மாசி மக உற்சவம்: விபசித்து முனிவருக்கு காட்சி!

விருத்தகிரீஸ்வரர் மாசி மக உற்சவம்: விபசித்து முனிவருக்கு காட்சி!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தில், விபசித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி தரும்  ஐதீக நிகழ்ச்சி இன்று நடக்கிறது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம்,  கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சம், பல்லக்கில் சுவாமி வீதியுலா,  இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் (26ம் தேதி) இரவு 7:30 மணிக்கு நுõற்றுக்கால் மண்டபத்தில் நாக  வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா, நேற்று (27ம் தேதி) யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர்  தரிசனம் செய்தனர். ஆறாம் நாள் உற்சவமாக இன்று (28ம் தேதி) காலை 6:00 மணிக்கு பெரிய நாயகர், பெரிய நாயகி, இளையநாயகி மற்றும்  பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, ஆருத்ரா நட்சத்திரத்தில் காலை 11:00க்குமேல் 12:00 மணிக்குள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வி ருத்தகிரீஸ்வரர் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !