வீரட்டானேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தியில் சுவாமி வீதியுலா!
ADDED :3909 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப்பெரு விழா துவங்கியது. நேற்று அதிகார நந்தி உற்சவம் நடந்தது. காலை 7.00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. 9.30 மணிக்கு சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அதிகாரநந்தி வாகனத்தில் எழுந்த ருளினார். கோவில் கோபுர வாயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வீதியுலா துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது.