உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 108 நாட்களுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை!

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 108 நாட்களுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை!

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக, சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்து வருகிறது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 12ம் ஆண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை, கடந்த 23ம் தேதி துவங்கியது. ஐந்தாம் நாளாக நேற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து 108 நாட்களுக்கு, சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !