திருமலையில் வருடாந்திர வண்ணமயமான தெப்ப திருவிழா துவங்கியது!
ADDED :3930 days ago
திருமலை: திருமலையில் வருடாந்திர தெப்பதிருவிழா துவங்கியது. மார்ச் 1ம்தேதி முதல் 5ம் தேதி வரை திருவிழா நடைபெறும்.
முதல் நாளான்று ராமரும் சீதையும் லட்சுமணன் அனுமன் சமேதரராய் மாடவீதிகளில் வலம்வந்து பின் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்த புஷ்கரணி தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வந்தது படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த பக்தர்கள் தெப்பத்தில் வலம்வந்த சுவாமியை தரிசித்து மகிழ்ந்தனர்.