உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி, பெரியசாமி கோவிலில் மார்ச், 5ல் கும்பாபிஷேக விழா!

காமாட்சி, பெரியசாமி கோவிலில் மார்ச், 5ல் கும்பாபிஷேக விழா!

நாமக்கல்L என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரம் காமாட்சி, மாசி பெரியசாமி கோவிலில், மார்ச், 5ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.
நாமக்கல் என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தில், விநாயகர், காமாட்சி, மாசி பெரியசாமி, கன்னிமார், கருப்பண்ணார், நாகர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிவடைந்தை தொடர்ந்து, மார்ச், 5ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு, நாளை (மார்ச், 4) மாலை, 6 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, புன்யாகம், வாஸ்து, பூமி, பாலிகை மற்றும் யாகசாலை பூஜையும், காப்பு கட்டுதல், ஹோமம், தீபாராதனையும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு, விக்ரஹங்களுக்கு அஷ்டபந்தனம் யந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மார்ச், 5ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், காலை, 7.40 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை, 8 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு, மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. அதையடுத்து, அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை காமாட்சி, மாசி பெரியசாமி கோவில் பங்காளிகள், திருப்பணிக்குழு அறங்காவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !