உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி சுவாமி ஊர்வலம்!

விக்கிரவாண்டி சுவாமி ஊர்வலம்!

விக்கிரவாண்டி: மயிலம் அருகே உள்ள செண்டூர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமி உற்சவர் மாசி மகம் உற்சவத்திற்கு திருக்காஞ்சி நோக்கி ஊர்வலம் சென்றனர். திண்டிவனம் வட்டம் செண்டூரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் திருப்பணி ஏழு ஆண்டுகளாக நடந்து வருகிறது . இதற்காக நன்கொடை வசூலித்து திருப்பணியை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். வரும் 4ம் தேதி திருக்காஞ்சியில் நடக் கும் மாசி மகத் திருவிழா உற்சவத்தில் கலந்து கொள்ள நேற்று காலை உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வேனில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். வழியில் திருப்பணிக் கமிட்டி தலைவர் கோவிந்தன் தலைமையில் பஜனை குழுவினர் நந்த கோபால், செந்தில் , வீரமுத்து மற்றும் குழுவினர் சுவாமி பாடல்களை பாடி மக்களிடம் உண்டியல் ஏந்தி நன்கொடை வசூலித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !