விநாயகர் கோவில் தேர் ஊர்வலம்!
ADDED :3929 days ago
கூடலூர் : கூடலூர் சக்தி விநாயகர் கோவில், திருத்தேர் ஊர்வலம் வரும் 6ம் தேதி நடக்கிறது.கூடலூர் சக்தி விநாயகர் கோவிலின், 29ம் ஆண்டு விழா, கடந்த, 1ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், 8:30 மணிக்கு உற்சவ பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பாலிகா ஸ்தாபனம் ரஷாசபந்தனம் கொடிமர பூஜை நடந்தது. 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு சக்தி விநாயகர் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் கோவில் அறகட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.