மூங்கில் துறைப்பட்டில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4074 days ago
மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பாலமுகலேஷ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. பாலாம்பிக்கைக்கும் மற்றும் சீனிவாச பெரு மாள் சுவாமி பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு பூஜையும் ஏற்பாடு செய்தனர்.திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை வழிபட்டனர். சுவாமிக்கு அய்யர் கிரி, பிரதோஷ பூஜைகளை செய்தார். கோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்த தனபால், ஜெயராமன், வெங்கட்ராமன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.