உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெங்கநாதருக்கு திருக்கல்யாணம்!

ரெங்கநாதருக்கு திருக்கல்யாணம்!

கோவை : உலக நன்மை வேண்டி, துடியலுார் அருகே பன்னிமடை தாளியூரில் உள்ள, குழந்தை ரெங்கநாதர் பெருமாள் கோவிலில், பெட்டத்தம்மன் துளசியம்மாள், குழந்தை ரெங்கநாதர் பெருமாளுக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

ஓம் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி அறக்கட்டளை மற்றும் தாளியூர் பொதுமக்கள் சார்பில், சீனிவாச குருசாமி, பூசாரிகள் கணேஷ், ராதாகிருஷ்ணன் முன்னிலையில், 108 சங்காபிஷேக சுதர்சன யாகம், கோமாதா பூஜை நடந்தது.பாரிவேட்டை நிகழ்ச்சி, விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தது. நிர்வாகிகள், தேவராஜ், வேலுசாமி, சின்னராஜ், சுரேஷ் உட்பட பக்தர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !