திருக்கோஷ்டியூரில் போக்குவரத்து மாற்றம்!
சிவகங்கை:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 4) மதியம் 1 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை-திருப்புத்தூருக்கு செல்லும் பிற வாகனங்கள் மதகுபட்டி, கருவேல்குறிச்சி, அண்ணா நகர், கருங்குளம், பட்டமங்கலம் வழியாகவும், திருப்புத்தூர்- சிவகங்கைக்கு வரும் வாகனங்கள் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், சொக்கநாதபுரம், மதகுபட்டி வழியாகவும், காரைக்குடி- திருக்கோஷ்டியூருக்கு செல்லும் பஸ்கள் கண்டர மாணிக்கம், பட்ட மங்கலம் திருப்புத்தூர் வழியாகவும் செல்ல வேண்டும்.
நிறுத்தம்: சிவகங்கை வழியாக கோவிலுக்கு வரும் சிறப்பு பஸ், தனியார் பஸ்கள் சுள்ளங்குடியிலும், திருப்புத்தூர் வழியாக வரும் பஸ்கள் தானிப்பட்டி விலக்கு அருகிலுள்ள வயல்வெளியிலும், மதுரை, மேலூர், எஸ்.எஸ். கோட்டை வழியாக வரும் வாகனங்கள் சுண்ணாம்பிருப்பு, குண்டேந்தல்பட்டி, பிராமணம்பட்டி வழியாக பழைய போலீஸ் ஸ்டே ஷன் அருகிலும், காரைக்குடி, கண்டரமாணிக்கம் வழியாக வரும் வாகனங்கள் காவடிக் கண்மாயிலும் நிறுத்த வேண்டும். உள்ளூர், வெளியூர் திருக் கோஷ்டியூர் ஊருக்குள் இன்று (மார்ச்4)முதல் 6ந்தேதி வரை ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது.