உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்!

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்!

நாமக்கல் : கதிராநல்லூர், சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.

நாமக்கல் அடுத்த, கதிராநல்லூரில் மகா கணபதி, சக்தி மாரியம்மன், பாலமுருகன், நவக்கிரக, குறிஞ்சி கோபுரம், அரசு வேம்பு விநாயகர் ஆகிய கோவில்கள், மிகுந்த பொருட்செலவில், புதிதாக திருப்பணி துவங்கப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

விழாவை முன்னிட்டு, கடந்த, 27ம் தேதி இரவு, கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, கணபதி, நவக்கிரஹம், மகாலட்சுமி ஹோமம், காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல், இரண்டாம் காலயாக பூஜை, புதிய சிலைகள் கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல், கோபுரம் கண் திறத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு நடந்தது.

அதையடுத்து, காலை, 7 மணிக்கு கோபுரம் மகா கணபதி, சக்தி மாரியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து.தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், அபிஷேகம், ஆராதானை நடந்தது. விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !