நாகலிங்க விநாயகம் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது!
ADDED :3928 days ago
உடுமலை, வாளவாடி கிராமத்தில் சுந்தர வள்ளி தாயார் சமேத சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுந்தரலிங்கேஸ்வரருக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டியும், விவசாயம், கல்வி, செல்வம், உடல்நலம், மனநலம் காக்க வேண்டியும் சிறப்பு யாகங்கள் நடந்தன; முத்துக்குமார் ஆச்சாரியர் நடத்தினார். வாளவாடி கிழக்கு வீதியில் உள்ள நாகலிங்க விநாயகம் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு சுந்தரலிங்கேஸ்வரர், சுந்தரவள்ளி தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வாளவாடி சதுரகிரி பக்தர்கள் குழு சார்பில், மதியம், 12:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.