உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண மகோற்சவ திருவிழா !

திருக்கல்யாண மகோற்சவ திருவிழா !

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகேயுள்ள சித்துார் தாலுகா கோவிந்தாபுரம் குண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண மகோற்சவ திருவிழா நேற்று துவங்கியது.

காலை, 5:00 மணிக்கு சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், இரவு, 7:00 மணிக்கு கம்பம் வெட்டுதல், இரவு, 9:00 மணிக்கு கும்பம் நிறைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை, 5:00 மணிக்கு சக்தி பூவோடு வளர்த்தல், கம்பம் போடுதல், காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 9:00 மணிக்கு குண்டம் வளர்த்தல், இரவு, 10:30 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை, 5:00 மணிக்கு சக்தி கும்பம் நிறைத்தல், காலை, 6:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல், இரவு, 8:00 மணிக்கு கும்பம், கம்பம் ஊர்வலம் வந்து கங்கையில் விடுதல், 6ம் தேதி காலை, 8:00மணிக்கு சப்பரம் எடுத்தல், மஞ்சள் நீராடல், காலை, 10:00 மணிக்கு அபிேஷக பூஜை, காலை, 11:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !