திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்!
ADDED :3927 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசித்திருவிழா தேரோட்டம், நேற்று காலை விமரிசையாக நடந்தது.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், கடந்த மாதம், 23ம் தேதி, கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா துவங்கியது. தினமும் காலை, மாலையில், சுவாமி, அம்பாளும், பல வகையான வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 10ம் நாளான நேற்று, காலை 5:30 மணிக்கு, குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார்; 6:05 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். சுவாமி எழுந்தருளிய தேரை, 6:50 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர்ந்து, அம்மன் தேர் பவனியும் நடந்தது; தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.