உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி!

முத்தாலம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி!

புதுச்சேரி: வைத்திக்குப்பம், முத்தாலம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. வைத்திக்குப்பத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த மாதம் 8ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது. மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், கோ பூஜை, நவகிரக ஹோமம், பரிவார பூஜைகள் நடந்தது. 2ம் கால பூஜைகள் முடிந்து, கலசாபிஷேகம் நடந்தது. விழாவில், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !