சிவகங்கை குளத்தில் தர்ப்பணம்!
ADDED :3928 days ago
சிதம்பரம்: மாசி மகத்தையொட்டி சிதம்பரம் சிவகங்கை குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று மாசி மகம் நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிதம்பரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிவகங்கை குளத்தில் குளித்து, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.