தேவகோட்டையில் மாசிமகம்!
ADDED :3884 days ago
தேவகோட்டை : மாசிமகத்தை முன்னிட்டு குன்றக்குடியிலிருந்து ரத்தினவேல் தேவகோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட ரத்தினவேல் சிறப்பு பூஜைக்கு பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்தனர். நகரப்பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட ரத்தினவேல்,சிறப்பு அலங்காரத்தில் இருந்த சுவாமி முருகன் கைளில் அணிவிக்கப்பட்டது. ரத்தினவேலை பையில் இருந்து எடுத்தால், 14 மூடை அரிசியில் சாதம் சமைத்து அன்னதானம் வழங்க வேண்டும் என்ற மரபுப்படி மகேஸ்வர பூஜைக்கு பின் ஆயிரக் கணக்கானோருக்கு விருந்தளிக்கப் பட்டது.