ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ADDED :3884 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இக்கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி தங்க விமானம், தங்க கொடி மரம் அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில்,துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இப்பணி நடக்கிறது. மேலும் கோயிலை புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.