உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்ட விழா

சிதம்பரேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்ட விழா

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவில் மாசி தேரோட்டம் விழா சிறப்பாக நடந்தது.பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு கிராமத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசிமாத தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு, மார்ச் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று அதிகாலை மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் போன்றவை நடந்தது. சிவகாமிசமேத சிதம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 4.30 மணிக்கு, சிதம்பரேஸ்வரர் தேரோட்டம் துவங்கியது. பொதுமக்கள், பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து, நத்தமேடு கிராமத்தின் முக்கிய வீதி வழியாக சென்று, மாலை 6.30 மணிக்கு கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தேரில் சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று சென்னகேசவ சென்றாயப்பெருமாள் கோவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு, சென்றாயப்பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு, சென்றாயப்பெருமாள் தேரோட்டம் நடக்கிறது. சிதம்பரேஸ்வரர் தேரோட்டம் நிகழ்ச்சியில், வீரபாண்டி எம்.எல்.ஏ.,செல்வம், பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !