உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7 ஆண்டுக்கு பின் பத்ரகாளியம்மன் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

7 ஆண்டுக்கு பின் பத்ரகாளியம்மன் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மேட்டூர்: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம், 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது.சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி நடந்ததால், கடந்த, 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. பணிகள் முடிந்து, கடந்த, 2013 ஜனவரியில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து அம்மன் வீதி உலாவுக்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், இரு பெரியதேர், விநாயகருக்கு ஒரு தேர் என மூன்று தேர்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த, 22ம் தேதி புதிய தேர்களின் வெள்ளோட்டம் நடந்தது. 7 ஆண்டுக்கு பின், நேற்று மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் விநாயகர் தேர் மற்றும் சிறிய அம்மன் தேர் வீதிஉலா நடந்து. நேற்று மாலை, 4 மணிக்கு இரு தேர்களும் நிலையில் இருந்து புறப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நாற்புற வீதியிலும் உலா வந்த இருதேர்களும் மாலை, 6 மணிக்கு நிலையை அடைந்தது.நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், மேச்சேரி சுற்றுப்பகுதி பக்தர்கள் என, 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அம்மன் பெரிய தேர் வீதி உலா இன்று (மார்ச்.5) மாலை, 3.30 மணிக்கு நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏழு ஆண்டுக்கு பின்பு நேற்று மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்து பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், டவுன்பஞ்., தலைவர் குமார் உள்பட ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !