ஹோலி பண்டிகை துவங்கியது: தீ மூட்டி கொண்டாட்டம்!
ADDED :3927 days ago
சவுகார்பேட்டை: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நேற்று மாலை தீ மூட்டி, ‘ஹோலி தெகன்’ கொண்டாடப்பட்டது. வசந்தகாலத்தை வரவேற்கும் வகையில் வடமாநிலத்தவரால், ஹோலி பண்டிகை இன்று, கொண்டாடப்படுகிறது. ஹோலியை முன்னிட்டு, சென்னை சவுகார்பேட்டை, தண்டையார்பேட்டையில் வாழும் வடமாநிலத்தோர், நேற்று மாலை, தீ மூட்டி, ‘ஹோலி தெகன்’ கொண்டாடினர். எரியும் தீயில், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து, மறுநாள் (இன்று) வண்ணமயமான வாழ்க்கை மலர வேண்டும் என்பதை எடுத்துகாட்டுவதே, ஹோலி பண்டிகையின் அர்த்தம் என, அவர்கள் கூறுகின்றனர்.