உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபகவான் கோவிலில் குருவார விழா: பக்தர்கள் தரிசனம்!

குருபகவான் கோவிலில் குருவார விழா: பக்தர்கள் தரிசனம்!

திருவாரூர்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் நீடாமங்கலம் அருகே  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவார தரிசன விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவிலில் நேற்று அதிகாலை 6.00 மணிக்கு வெட்டாறிலிருந்து யானை மூலம் தீர்த்தம் எடுத்து வந்து, காலை 9.00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. காலை 10.00 மணிக்கு அபிஷேகம்,பகல் 12.00 மணிக்கு மகாபூ ராணாஹீ தி,பகல் ஒரு மணிக்கு பஞ்சமுக அர்ச்சனை,தீபாராதனைம்,மாலை 6.00 மணி க்கு குருவார தரிசனம் ,மாலை 7 மணிக்குநாதஸ்வர இன்னிசை ,இரவு 9 மணிக்கு தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பஞ்சமுக அர்ச்சனையில் பங்கேற்று சிறப்பு பரிகாரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் தக்கார் சிவரா ம்குமார்,உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல்அலுவலர் சாத்தையா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !