மாசிமகத்திற்கு பிராமணர் சங்கம் அன்னதானம்!
ADDED :3872 days ago
புதுச்சேரி: மாசிமகத்திற்கு வந்த பக்தர்களுக்கு, புதுச்சேரி பிராமணர் சமூக நலச்சங்கம் மற்றும் ஸ்ரீசாயி சங்கர பக்த சபா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முத்தியால்பேட்டை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் கல்யாணம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா சாஸ்திரி, ஷர்மா, சற்குரு ஹரி, கிருஷ்ணமூர்த்தி, சீனுவாச சாஸ்திரிகள் உள்ளிட்டோர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.