உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதிக்காக பிருந்தாவனில் அதிருத்ர மகா யக்ஞம்!

உலக அமைதிக்காக பிருந்தாவனில் அதிருத்ர மகா யக்ஞம்!

பெங்களூர்: உலகில் அமைதிக்காகவும், மனித குலத்தின் நன்மைக்காகவும் பெங்களூர் பிருந்தாவனில் அதி ருத்ர மகா யாகம் நடை பெற்றது. இந்த யாகத்தால் சிவ-சக்தியின் சக்தி முழுமையாக கிடைத்து அதன்மூலம் உலகில் சமாதானம் மற்றும் சுபீட்சம் கிடைக்கும் என்று பகவான் சாய்பாபா கூறிபிடுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க இந்த யாகத்தின் 5ம் நாள் விழா பெங்களூர் பிருந்தாவன் சாய் ரமேஷ் ஹாலில் மங்கள வாத்தியம் முழுங்க சிறப்பாக நேற்று நடைபெற்றது.  விழாவில் பஜனைகள் மற்றும், ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம்,  சாய் காயத்ரி ஹோமம் நடைபெற்றது. விழாவில் பேராசிரியர் கே.அனில் குமார் அவர்களின் சொற்பொழிவு மற்றும்  டாக்டர் கீ: கணேஷ் மற்றும் மற்றும் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !