பொன்னர் சங்கர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3870 days ago
தேவதானப்பட்டி : ஜெயமங்கலம் பெரியஅக்காண்டீஸ்வரி, பொன்னர் சங்கர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் விநாயகர் அனுக்கை, சுத்தி புண்ணிய வாகனம், மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விக்னேஷ்வரர் பூஜை, அஷ்டலட்சுமி ஹோமம் தீப ஆராதணை பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருநாவுக்கரவு குருக்கள் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். ஊராட்சி தலைவர் சங்கரலிங்கம், விழாக்குழுவினர்கள் குப்புசாமி, சங்கரபாண்டி, செல்வம், துரைப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.