ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை
ADDED :3870 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : மாசிமகத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டள் கோயிலில் அன்னக்கொடை உற்சவம் நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், புளியோதரை படைக்கப்பட்டு சிறப்பு புஜைகள் நடந்தது. அனந்தராமன் பட்டர் கூறகையில்,""வேளாண்மை செழித்து, பயிர்கள் வளர்ந்து நாட்டு மக்களுக்கு அன்னம் குறைவின்றி கிடைத்திட மாசிமகம் தோறும் ஸ்ரீஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு அன்னக்கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம், என்றார்.தக்கார் ரவிச்சந்திரன்,நிர்வாக அலுவலர் ராமராஜா பங்கேற்றனர்.