உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பத்துார் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

கடம்பத்துார் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

கடம்பத்துார்: கடம்பத்துார், சித்திபுத்தி விநாயகர் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் – பேரம்பாக்கம்  நெடுஞ்சாலையில், ஊராட்சி மன்றம் அருகே அமைந்துள்ளது சித்திபுத்தி விநாயகர் கோவில்.  இந்த கோவிலில், சிறிய விமானம் அகற்றப்பட்டு,  பெரிய கோபுரம் அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேகம், நேற்று, காலை 8:00 மணிக்கு நடந்தது.  முன்னதாக, நேற்றுமுன்தினம், காலை 7:30  மணிக்கு, கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு, முதல்கால யாக சாலை பூஜையும், பூ ர்வாங்கமும், கலாகர்ஷணமும் நடந்தது. பின், நேற்று, காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது.   பின், காலை 8:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும், பகல் 11:00 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !