காரிய சித்தீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED :3865 days ago
ஆர்.கே.பேட்டை:பார்வதிதேவி உடனுறை காரிய சித்தீஸ்வரர் கோவிலில், இன்று காலை, கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று, இதற்கான யாகசாலை பூஜை துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது, பார்வதிதேதி உடனுறை காரிய சித்தீஸ்வரர் கோவில். கடந்த ஓராண்டு காலமாக, இதற்கான பணிகள் நடந்து வந்தன.இன்று காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று காலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோலத்தில் ஊர்வலம் வந்தன. இரவு, 8:00 மணிக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இன்று காலை, 10:10 மணிக்கு, கோவில் கோபுர கலசம் மற்றும் மூலவர் சிலைகளுக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படும்.