கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3865 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகமும், உஷபூஜையும் நடைபெற்றது. எட்டு மணிக்கு பந்தீரடி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 25 கலச பூஜையும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு அம்மனை பல்லக்கில் அமர்த்தி கோயிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.