மண்டைக்காட்டில் பெரிய சக்கர தீவட்டி பவனி
ADDED :3865 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறாம் திருவிழாவான கடந்த ஆறாம் தேதி அம்மனுக்கு பெரியபடுக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான 9-ம் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடக்கிறது. தீவட்டி கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த பவனி நடக்கிறது. பத்தாம் திருவிழாவான செவ்வயாய் அன்று நள்ளிரவில் ஒடுக்குபூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.