அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3869 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டையில், புதுõர் சாலையில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 8ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு சூரிய பூஜை, சோம கும்ப பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானமும், கலச புறப்பாடும் நடந்தத. 10.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சர்வசாதகர் மேல்ஒலக்கூர் ராம்குமார சோமயஜிலு கும்பாபிஷேகத்தை நடத்தினார்.