உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேபாள முக்திநாத் கோவிலில் ஹோமம்: திருவாரூரில் இருந்து குழு சென்றது!

நேபாள முக்திநாத் கோவிலில் ஹோமம்: திருவாரூரில் இருந்து குழு சென்றது!

திருவாரூர்: நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் நடத்த திருவாரூரில் இருந்து 21 பேர் கொண்ட யாத்திரை குழுவினர் புறப்பட்டனர். ஜெ., அனைத்து வழக்குகளில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராக வேண்டி அ.தி.மு.க.,வினர் பல்வேறு வகையான யாகங்கள், பூஜைகள், திருமணங்கள், கோவில்களில் வில்வ மரக்கன்றுகள் நட்டு வைத்து சுமங்கலி பெண்களுக்கு பல்வேறு பொருட்களை வழங்கியும், குத்து விளக்கு பூஜையுடன், பள்ளிவாசல், தர்கா, தேவாலயங்களில் சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் கோவிலில் இம்மாதம் 16ம் தேதி மகா சுதர்சன ஹோமம் நடத்திட யாத்திரைக்குழுத் தலைவர் பாரதிசுப்ரமணியன் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவினர் திருவாரூரில் இருந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது. யாத்திரை செல்லும் அந்தக் குழுவினர்கள் காத்மாண்டு பசுபதி நாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், கோரக்பூர் கோரக்கநாதர், நைமிசாரண்யம் பாலாஜி மந்திர் கோவிலில் அர்ச்சனையும், அயோத்யா அம்மாஜி மந்திர் கோவிலில் ஹோமம் மற்றும் அர்ச்சனை, காசி விஸ்நாதர்கோவிலில் பிரார்த்தனையுடன், அலகாபாத் வேணிமாதவர் கோவிலில் திருவேணி சங்கமத்தில் நீராடல் மற்றும் சன்னியாசிகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !