வேலூரில் 1,008 விளக்கு பூஜை!
ADDED :3867 days ago
வேலூர்: வேலூர் அடுத்த வஞ்சூர் வஞ்சியம்மன் அறக்கட்டளை தியான மண்டபத்தில், நேற்று முன்தினம், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. அறக்கட்டளை தலைவர் வில்வசம் தலைமை வகித்தார்.வஞ்சூர் பஞ்சாயத்து தலைவர் புருஷோத்துமன் பூஜையை தொடங்கி வைத்தார். இதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்பரசன், சுந்தர மூர்த்தி, திருவேங்கடம், விஜய், வாசு, ஆறுமுகம், கஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தயானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.