உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் அடிப்படை வசதியில்லாததால் பக்தர்கள் அவதி!

திருமலைக்கேணியில் அடிப்படை வசதியில்லாததால் பக்தர்கள் அவதி!

திண்டுக்கல்: அடிப்படை வசதியில்லாத திண்டுக்கல் திருமலைக்கேணியை பராமரிக்க அரசு முன்வரவேண்டும். திண்டுக்கல் கம்பிளியம்பட்டி அருகே திருமலைக்கேணி முருகன் கோயில் உள்ளது. பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில், இயற்கை எழில் கொஞ்சும் கரந்தமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.  மலையில் உள்ள வற்றாத சுனைநீர், குடிக்க சுவையாகவும், மூலிகை தீர்த்தமாகவும் விளங்குகிறது. பல சித்தர்களின் ஜீவ சமாதியும் இங்குள்ளது.  அடிப்படை வசதியில்லை: திருமலைக்கேணியில் பக்தர்கள் தங்க வசதியில்லை. வெயில், மழைக்கு ஒதுங்கவும் மண்டபங்கள் இல்லை. கிரிவலப் பாதையில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து பக்தர்களின் கால்களை பதம் பார்க்கிறது.

சமூக விரோதிகள்:  மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. மது அருந்தும் சிலர் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். திருட்டு கும்பலின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. காதல் ஜோடிகளும் அடிக்கடி கலந்துரையாடுகின்றனர்.

சுற்றுலா ஸ்தலமாக அறிவிப்பு:  திருமலைக்கேணியை சுற்றுலா தலமாக அறிவித்த போதும், இங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவில்லை. அதே நேரம் கந்தசஷ்டி, தைப்பூச விழாக்கள் இங்கு சிறப்பாக நடக்கிறது. மலைக்கேணியை சுற்றியுள்ள மரங்களை பலர் வெட்டி கடத்துகின்றனர். இதனால் இந்த கோயிலின் குளுமையான சீதோஷ்ண நிலையே மாறிவிட்டது. திருமலைக்கேணியை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !