திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்
ADDED :5228 days ago
நெல்லிக்குப்பம் : பில்லாலி திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. தினமும் காலை சிறப்பு அபிஷேகமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. நேற்று காலை அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று கரக உற்சவமும், நாளை 24ம் தேதி மாலை 4 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.