உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோயிலில் அஸ்டமி யாகபூஜை

ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோயிலில் அஸ்டமி யாகபூஜை

தர்மபுரி : தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஸ்டமி யாக பூஜை இன்று (ஜூன் 23) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீசோடச கணபதியாகம், ஸ்ரீஅஸ்ட பைரவர் யாகம், எகச ருத்ர யாகம், ஸ்ரீஅஸ்ட பைரவர் யாகம், ரகா ருந்ர யாகம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்வாமிக்கு 64 வகையான அபிஷேகங்கள், ஸ்ரீராஜ அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு அகோர அஸ்தர யாகம், ஸ்ரீகுறிஞ்சி பூஜை, வரமிளகாய் 1,008 கிலோ கொண்டு சிறப்பு யாக பூஜை, சர்வசத்ரு துஸ்ட கிரக நிவர்த்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கிருபாகர குருக்கள் மற்றும் தமிழக, கர்நாடகா மாநில பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !