பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்!
ADDED :3865 days ago
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக 15 ஆண்டுக்கு பின் 1008 கலசாபிஷேக பூஜை நடந்தது.
பிள்ளையார்பட்டி கோயிலில் மார்ச் 9ல் கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. யாகசாலை பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்துச்சென்றனர். கற்பகவிநாயகருக்கு புனித நீரில் அபிஷேகம் செய்தனர். பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள்,வேத விற்பன்னர்கள், திருமுறையார்கள், நாதஸ்வர, மேள இசைகலைஞர்கள் பங்கேற்றனர். நிர்வாக அறங்காவலர்கள் அரு.நாராயணன் செட்டியார், காரைக்குடி வீர.முத்துக்கருப்பன் செட்டியார் ஏற்பாட்டை செய்திருந்தனர்.