ஆலங்குடி குருபகவானுக்கு 10,008 சங்காபிஷேகம்!
ADDED :3864 days ago
திருவாரூர்: ஆலங்குடி குருபகவான் கோவிலில், 10,008 சங்காபிஷேகம் நடந்தது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. இங்கு மாசிமக குருவார தரிசன விழா, கடந்த 5ம் தேதி நடந்தது.விழாவில், நேற்று காலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. பிற்பகல் 2:00 மணிக்கு, குருபகவானுக்கு, 10,008 சங்காபிஷேகம் நடந்தது. மாலை சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.