ராம தீர்த்தங்கள்!
தன்ட்தவான்குளம்: இந்தக் குளம் அயோத்தி அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது. ராமபிரானும் அவரது சகோதரர்களும் அதிகாலையில் நடந்துவந்து பல்தேய்த்து முகம் அலம்புவார்கள். ராமநவமியன்று இக்குளத்தில் நீராடினால் முன்ஜென்மபாவம் நீங்குமென்பது ஐதீகம். ஒரு காலத்தில் இக்குளத்தின் அருகில் கவுடில்ய முனிவர் தவம்செய்தார். அப்போது அவர் அமர்ந்துகொள்ள பயன்படுத்திய மான்தோல் ஒன்று குளத்தில் விழுந்ததும் அது உயிர்பெற்று மானாக குளத்திலிருந்து வெளிவந்து முனிவரிடம் வாழ்த்துபெற்று விண்ணுலகம் சென்றது.
சூரியகுளம்: அயோத்தியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சூரிய குளம். இந்தக் குளத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி. சூரியனுக்கு அர்க்கியம் விட்டு வழிபட்டால் கண்ணொளி பிரகாசிக்கும், சருமம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். இந்தக் குளத்தின் அருகே சூரியனுக்கு ஒரு கோயிலும் உள்ளது.
தசரதகுளம்: பஞ்சகோசி பரிக்கிரமா சாலையில் தசரதகுளம் அமைந்துள்ளது. பத்ரலாத் பூர்ணிமா தினத்தன்று இங்கு நீராடி பக்தர்களுக்கு ஆடை தானம் வழங்கினால் வாழ்க்கையில் என்றும் சுகம் காணலாம்.
பிரம்மகுளம்: அயோத்தியின் டெக்ரி பஜாரிலிருந்து ராஜ்காட் செல்லும் வழியில் இந்தக் குளம் அமைந்துள்ளது. இங்கு பிரம்மன் தங்கி யாகம் செய்து கூடுதல் சக்தி பெற்றதாக ஐதீகம் மேலும் இக்குளத்தில் நீராடி. அருகில் கோயில்கொண்டுள்ள பிரம்மாவை வழிபட்டால் பிரம்மலோகம் கிட்டுமென்பது நம்பிக்கை.
சீதாகுளம்: அயோத்தியில் ராமபிரான் காலார நடந்த பகுதியை அசோக சோலைவனம் என்பர். இந்த வனத்திற்குள் அமைந்துள்ளது. சீதாகுளம் இந்தக் குளத்தை சீதாதேவி உருவாக்கியதாக புராணம் கூறுகிறது. இந்தக் குளத்தில் கிருஷ்ணசதுர்த்தியிலும்-வைகாசி சுக்ல நவமியிலும் நீராடி சீதாதேவியை மான சீகமாக வணங்கினால், பெண்களுக்கு மனம்போல் வாழ்வு அமையுமென்பது நம்பிக்கை.