உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீராத கடன் தீர!

தீராத கடன் தீர!

திருவள்ளூர்,கடம்பத்தூர், பேரம்பாக்கத்துக்கு அருகில் உள்ளது. நரசிங்கபுரம். இத்தலத்தில் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார். தாயார் மகாலட்சுமியை மடியில் அமர்த்தி, இடது கையால் அரவணைத்து, வலது கரத்தை அபய ஹஸ்தமாகக் காட்டி அருள்பாலிக்கிறார். இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாகக் கொண்ட கருடாழ்வாரை தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !