உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உணவு பஞ்சம் நீங்க!

உணவு பஞ்சம் நீங்க!

திருவள்ளூர், அம்பத்தூருக்கு அருகில் கொரட்டூரில் அமைந்துள்ளது விண்ணவராய பெருமாள் கோயில், இக்கோயிலில் பெருமாளுக்கு எதிர்ப்புறம் உள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வழிபட்டால் சர்ப்ப தோஷம் விலகுகிறது. கனகவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகும்: குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெருமாளை 11 வாரம் சனிக்கிழமை தோறும் பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன், உணவு பஞ்சம் வராது என்பதும் நம்பிக்கை, இக்கோயிலில் பல்லி உருவம் பொறித்த விதானக் கல் ஒன்று உள்ளது. தலையில் பல்லி விழுந்து கவலைப்படுவோர். 11 வாரம் இதனை பூஜித்து, பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்தால் தோஷம் விலகுவதாகச் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !