உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவிகம்போய் ஸ்தம்பேஸ்வரர்

கவிகம்போய் ஸ்தம்பேஸ்வரர்

சிவபெருமானின் ஐந்தொழில்களில் ஒன்றான கரத்தல் (மறைத்தல்) என்பதைத் துõலமாகப் பக்தர்களுக்குக் காட்டும் இந்த சிவாலயம் குஜராத்தில் உள்ளது.  சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கடல் பின்வாங்கியதால் இந்த கோயில் பற்றி உலகுக்குத் தெரியவந்தது.  தொன்மையான இந்த கோயில், தாரகாசுரனின் வதத்திற்குப் பிறகு முருகனால் கட்டப்பட்டதாக ஸ்கந்த புராணம் குமரிக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.  வதோதரா நகரிலிருந்து 40 மைல் துõரத்தில் உள்ள இந்தக் கோயில் அரபிக் கடலின் காம்பே கடற்கரைப் பகுதியில், மாஹி நதி அரபிக் கடலு<டன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் கவிகம்போய் உள்ளது.  கடலில் நீரேற்றத்தின்போது முழுவதும் மறையும் இந்த சிவபெருமானின் திருவுருவம், நீர் பின்வாங்கும்போது முழுவதுமாகக் காட்சி தரும்.  4 அடி உயரமும் 2 அடி சுற்றளவுமுள்ள இந்தத் திருவுருவம் கண்ணுக்கு மறைந்தும் பிறகு நிறைந்தும் மாறி மாறிக் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி.  சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சிவபெருமானைத் தரிசிக்க, அரபிக் கடலின் அலைகளோடு போட்டியிடுவது போல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  சிவனின் திருமூர்த்தத்திற்கு எண்ணெய் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவாலயங்களில் வழக்கமாயுள்ள பாலபிஷேகம் இங்கு கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !