பிருந்தாவனில் சிவ - பார்வதி திருக்கல்யாணத்துடன் அதிருத்ர மகா யக்ஞம் நிறைவு!
பெங்களூரு: சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூருவில் நடைபெற்று வந்த அதிருத்ர மகா யக்ஞம் நேற்று சிவ - பார்வதி திருக்கல்யாணத்துடன் கோலாலகமாக நிறைவடைந்தது.
சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள பிருந்தாவனில் மார்ச் 1ம் தேதி துவங்கிய , அதிருத்ர மகா யக்ஞம் 12ம் தேதி நிறைவடைந்தது. முதல் அதிருத்ர மகா யக்ஞம் பிரசாந்தி நிலையத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது அதிருத்ர மகா யக்ஞம் 2007ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. பகவான் சத்ய சாய் பாபாவின் 90ம் ஆண்டு பிறந்த தினம் மற்றும் மூன்றாவது அதிருத்ர மகா யக்ஞம் பெங்களூரு பிருந்தாவன் சாயி ரமேஷ் ஹாலில் மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம், வேத பாராயணம், பஜனை, ருத்ர ஹோமம், காயத்ரி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று (மார்ச் 12ல்) சிவ - பார்வதி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.