உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கந்தரை திருப்புரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா!

வடக்கந்தரை திருப்புரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா!

பாலக்காடு: பாலக்காடு, வடக்கந்தரை, திருப்புரைக்கல், பகவதியம்மன் கோவில் திருவிழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. இங்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம், பத்து நாட்களுக்கு முன் நடந்தது. கோவில் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதி நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு, கோவிலில் வெடியுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை பிரபல கலைஞர்களின் பஞ்சவாத்தியம் முழங்க அலங்கரிக்கப்பட்ட, 15 யானைகள் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து உச்சபூஜை, பகல், 1:00 மணிக்கு, செண்டை மேளம், பிற்பகல், 3:30 மணிக்கு யானைகள் அணிவகுப்புடன் பகல் வேளை புறப்பாடு நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மாடம்பி வாத்தியம், வண்ணார்பூதம், பூக்காவடி, கும்பக்களி, புலிக்களி, மயிலாட்டம், ஒயிலாட்டம், தைய்யம், வண்டி வேஷங்கள், செண்டை மேளத்துடன் யானைகளின் பேரணியும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !