உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

ஆனைமலை மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!

ஆனைமலை: கோட்டூரில் உள்ள பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோட்டூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாப்படும். நேற்று முன்தினம், 60 அடி நீளத்தில் குண்டம் கட்டப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு, 10:30 மணியளவில் குண்டத்தில் பூ வளர்க்கும் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை, 7:30 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் கடந்த ஒரு மாத காலமாக அம்மனை வேண்டி விரதமிருந்த பக்தர்கள், நேற்று காலையில் கோவில் அருகில் உள்ள தீர்த்த கிணற்றில் நீராடி அம்மனின் அருள் வேண்டி குண்டத்தில் இறங்கினர். முதலில் கோவில் பூசாரி குண்டத்தில் இறங்க அதை தொடர்ந்து, அருளாளிகள், பக்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !