ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் கொடியேற்றம்!
ADDED :3868 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புதூர் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளை குமார் பட்டர் ,செந்தில்பட்டர்,ராஜா பட்டர் செய்தனர். பக்தர்கள் அம்மனின் அருள்பெற்று சென்றனர்.