சிவகாசி சிவன் கோயிலுக்கு புதிய தங்க தேர் !
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலுக்கு தெய்வீக பேரவை சார்பில் புதிய தங்க தேர் தயாராகி வருகிறது. இங்குள்ள விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்மன் சிவன் கோயில் உள்ளது. தெய்வீக பேரவை அமைப்பின் சார்பில் 2013ல் சுவாமி வீதி உலா வரும் வகையில் மரத்தேர் செய்து கொடுத்தனர். தங்கதேர் உருவாக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி தெய்வீக பேரவையின் தலைவர் ஏ.எஸ்.ராஜப்பன் தலைமையில் பக்தர்களின் நன்கொடையால் புதிதாக தங்க தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. தேர் அமைக்கும் பணியினை மதுரையை சேர்ந்த ஆர்.எம். முத்துஸ்பதி தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். ரூ. பல லட்சம் மதிப்பில் அழகிய மரச்சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள் ளன. மர சிற்பங்களுக்கு மேல் தாமிர தகடுகள் பொருத்தப்பட்டு அதில் தங்கமுலாம் பூசிய தகடுகளை பொருத்தும் பணி நடந்து வருகிறது. பங்குனி உத்திரம் அன்று தங்க தேரோட்டம் நடத்த தெய்வீக பேரவையினர் முடிவு செய்துள்ளனர்.