உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக நிறைவு விழா!

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக நிறைவு விழா!

வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா முடிந்து, ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன், முனிஸ்வரர் சுவாமி கோவில் மகாகும்பாபிேஷக விழா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி நடந்தது. கும்பாபிேஷக விழா நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமமும். 7:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.  பின்னர் இரவு, 9:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !