உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாஜி முதல்வர் தரிசனம்!

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாஜி முதல்வர் தரிசனம்!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுவாமி தரிசனம் செய்தார். கடலுார்  மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு வட மாநிலங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்து  வருகின்றனர். இக்கோவிலுக்கு நேற்று காலை வருகை தந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கோவிலுக்குப்  பின்புறம் உள்ள அஸ்வத்த நாராயணசுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து பூவராகசுவாமி கோவிலுக்குச் சென்று  மூலவர்  பெருமாள், குழந்தையம்மன், அம்புஜவல்லி தாயார் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். இதில் முன்னாள் முதல்வர் வருகையை யொட்டி  டி.எஸ்.பி. குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !