உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருணை பொங்கும் உள்ளம் அது கடவும் வாழும் இல்லம்!

கருணை பொங்கும் உள்ளம் அது கடவும் வாழும் இல்லம்!

பெருமாளிடம் உள்ள கருணை என்னும் பண்பை, தாயாக உருவகம் செய்து தயா சதகம் என்ற நுõல் எழுதப்பட்டது. இதில் நுõறு ஸ்லோகங்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்லோகத்தில், தயாதேவியே!  மென்மை மிக்க மனம் கொண்டவளே! பக்தர்கள் படும் துன்பத்தைப் பொறுக்காதவளே!தேவர்களைக் காப்பவளே! தன்னையும் விட, உற்சாகத்துடன் பக்தர்களை நீ நல்வழிப்படுத்துவதால், திருமலை (திருப்பதி) பெருமாள் உன் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கிறார். நீ சொல்லும் எதையும் அவர் மறுப்பதில்லை. மங்களம் தருபவளே! பெருமை மிக்க குணங்களால் பெருமாளையும் விட, உன்னையே எல்லோரும் மிகுதியாக போற்றுகின்றனர், என்று சொல்லப்பட்டு உள்ளது. தன்னை வணங்குதை விட, பிறரிடம் கருணை செலுத்துவதை கடவுள் விரும்புகிறார் என்பது இதன் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !